ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு இல்லாமல் கோலி எப்படி விளையாடுவார்? ஆஸி வீரர் யூகம்!

ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு இல்லாமல் கோலி எப்படி விளையாடுவார்? ஆஸி வீரர் யூகம்!

இந்த ஆண்டு இறுதியில் ஆஸிக்கு எதிராக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து ஆஸி வீரர்கள் நாதன் லயன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் சமூகவலைதளத்தில் உரையாடியுள்ளனர்.

கொரோனா காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட எல்லா கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலைமை சரியானாலும் இன்னும் சில மாதங்களுக்கு மைதானங்களில் ஆள் இல்லாமல் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்கும் வண்ணம் போட்டிகள் நடத்துவதே பாதுகாப்பானது என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களான நாதன் லயன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சமூகவலைதளத்தில் விவாதித்த போது ‘ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு  எதிராக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்தத் தொடர் ஆஷஸ் தொடருக்கு நிகரானதாக இருக்கும். அப்போது காலி மைதானத்தில் விளையாடப் போகிறோமா அல்லது பார்வையாளர்கள் முன் விளையாடப் போகிறோமா என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை.

களத்தில் ரசிகர்கள் தரும் ஊக்கம் இந்திய கேப்டன் கோஹ்லிக்கு பக்கபலமாக அமையும். ஆனால் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடந்தால் அப்போட்டி வித்தியாசமாக இருக்கும். கிரிக்கெட் அரங்கின் ‘சூப்பர் ஸ்டார்’ என்பதால், சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக பக்குவப்படுத்திக் கொள்வார். கடந்த முறை இந்தியா இங்கு வந்த போது ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் நாம் தொடரை இழந்தோம். இந்த முறை சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.