Connect with us

அரசுப்பள்ளியில் விஷப்பாம்பு கடித்து மாணவி கவலைக்கிடம்

Latest News

அரசுப்பள்ளியில் விஷப்பாம்பு கடித்து மாணவி கவலைக்கிடம்

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பள்ளியிலும் 11ஆம் வகுப்பு மாணவி நவதர்ஷினி, கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது கழிவறை கதவை திறந்தவுடன் விஷப்பாம்பு ஒன்று அவரை தீண்டியதாக கூறப்படுகிறது. இதனால், மிகுந்த வேதனை அடைந்த மாணவி, வலியால் அலறியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவி நவதர்ஷினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவி சற்று கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாருங்க:  சுஹாசினியின் ஹிந்தி பேச்சு அமீர் கண்டனம்

More in Latest News

To Top