ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் இல்லை! அப்போ வீட்டிலேயே இருக்கும் மக்கள் என்னதான் பண்றாங்க?? தகவல்கள் உள்ளே!!

440
OTTPLATFORMS
OTTPLATFORMS

இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், பூங்காக்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்களின் அவசர, அவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு எந்தவித வளாகங்களும் செயல்படக்கூடாது என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து சினிமா தியேட்டர்கள் இல்லாததால் வீட்ல இருக்கும் மக்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்? இதோ பிரத்தியேக தகவல்!

144 தடையால், மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளதால் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓ.டி.டி. பிளாட்பார்ம்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஓ.டி.டி. என்றால் OVER THE TOP என்பதன் சுருக்கம். இவற்றில் பல மொழி திரைப்படங்கள், வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், பலநாட்டு தொலைக்காட்சி தொடர்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இணையம் மூலம் காணலாம். குறிப்பாக, வெப் சீரிஸ்கள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்மார்ட் டி.வி. மட்டுமின்றி செல்போன் செயலி மூலமும் இவற்றை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் வசதி.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளதால் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்கள் ஓ.டி.டி.களை OTT PLATFORM-களை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

பாருங்க:  தமிழக அரசின் ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை!