Corona (Covid-19)
தமிழகம் மற்றும் இந்தியளவில் கொரொனா தொடர்பான ஏப்ரல் 22 தேதிக்கான நேற்றைய நிலவரம் என்ன?
சீனாவில் உருவாகி அனைத்து உலகங்களிலும் பரவி இப்போது இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கின்றது கொரொனா என்ற கொடிய வைரஸ். இதனை அடுத்து அனைத்து நாடுகளுமே ஸ்தம்பித்துப் போயுள்ளது, இந்தியாவிலும் நுழைந்த கொரொனா நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மக்கள் யாரும் வீட்டியை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகம் மட்டுமன்றி இந்தியாவில் கொரொனா தொடர்பான நிலவரத்தைப் பற்றி காண்போம்!
>கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1629 ஆக ஆதிகரிப்பு!
>அதிகபட்சமாக, சென்னையில் 15 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
>தமிழகத்தில் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில், 27 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
>தமிழகத்தில் நேற்றைய நிலவரபடி, கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.>இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20, 471 ஆக உயர்வு.
>>குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக உயர்வு.
>>கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழப்பு.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.