இந்திய அளவில் கொரொனாவின் பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது. இந்திய அளவில் நேற்றைய நிலவரபடி, கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.
இதனை அடுத்து, மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் தங்களால் முடிந்த கொரொனா நிதி உதவியை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து அடித்தட்டு மக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை நிதியாகவோ, பொருட்களாகவோ அரசுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக இதுவரை ரூ.160.93 கோடி பெறப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 நாட்களில் மட்டும் ரூ.26.30 கோடி நிவாரண நிதி பெறப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும்.
கொரோனா நிவாரணத்திற்காக மனமுவந்து நிதியுதவி அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/olc8KGS5XB
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 21, 2020