Entertainment
நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறார்
மதுரை சித்திரை திருவிழா வந்து விட்டாலே மதுரை மக்களுக்கி கொண்டாட்டம்தான். கடந்த இரண்டு வருடங்களாக சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறவில்லை இதனால் மக்கள் சொல்லொணா துயரம் கொண்டனர்.
ஏனென்றால் மதுரையின் பாரம்பரிய திருவிழாவில் சித்திரை திருவிழாவும் ஒன்று. சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவதும், அழகர் ஆற்றில் இறங்குவதும் இதற்காக மக்கள் ஆர்ப்பரிப்பதும் வழக்கமான ஒன்று.
உலக நலம் காக்க, மழை தண்ணீர் பொழிந்து மக்கள் சுகமாக இருக்க அழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்குவதை காண கண் கோடி வேண்டும்.
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவைக்காண மக்கள் நாளை அலைகடலென திரண்டு வருவர், தண்ணீரை பீய்ச்சியடித்து ஆர்ப்பரிப்பர்.
மதுரை மட்டுமல்லாது, மானாமதுரை, பரமக்குடி என வைகை ஆறு ஓடும் மதுரையை சுற்றிய பகுதிகள் அனைத்திலும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
நாளை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.