உலகப்புகழ்பெற்றது பாம்பன் பாலம். இந்தியாவில் ராமேஸ்வரத்தில் உள்ளது. ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பாம்பன் பாலத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள் அந்த அளவு புகழ்பெற்ற பாலம் இது.
39தூண்களுடன் பாம்பன் பாலம் உள்ளது. அந்தக்காலத்தில் ராமேஸ்வரத்தை தாண்டி வர வழி இல்லாமல் கடல் சூழ்ந்து இருந்ததால் ஆங்கிலேயர்களால் ரயில் பாலம் 1914ல் போடப்பட்டது.
இருந்தும் பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தால் மண்டபம் வரை பலரும் பேருந்தில் சென்று அங்கிருந்து ரயிலுக்கு காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாம்பன் பாலம் கட்ட திட்டம் தொடங்கப்பட்டு பத்து வருடத்துக்கும் மேலாக பணிகள் நடந்தன. 1988ல் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியால் இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சாலை வழிப்பாலம் அன்னை இந்திரா காந்தி பாலம் என அழைக்கப்படுகிறது. கடலுக்குள் 3 கிமீ இயற்கை அழகை ரசித்தபடி இப்பாலத்தில் செல்லலாம்.
இன்றுடன் இப்பாலம் திறக்கப்பட்டு 33 வருடங்களாகிறது.