இந்தியாவில் கொரொனா நோயின் தாக்கம் அதிதீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. உலக அளவில் இந்த நோய் தொற்று அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து, இந்தியாவில் பிரதமர் மோடி முதல் மாநில முதல்வர்கள் வரை கொரொனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் முதல் பல்துறை பிரபலங்கள் வரை கொரொனா நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய் என்ன செய்துயிருக்காரு தெரியுமா?? கொரொனா நோய் தடுப்பு பணிக்காக ஒட்டுமொத்த இந்தியாவுக்கே நிதி உதவி செய்துள்ளார்.
கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் தளபதி விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்; தமிழக முதல்வர் நிவாரணநிதிக்கு ரூ.50 லட்சம்; கேரளாவுக்கு ரூ.10 லட்சம்; கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி அளித்துள்ளார். மேலும், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் நிதி அளித்துள்ளார். கொரொனா நோய் தடுப்பு பணிக்காக வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை ஒரு ரவுண்ட் வந்துவிட்டார் நம்ம இளைய தளபதி விஜய்.