உலகளவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, திரை பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுக்கு கொரொனா தொடர்பான விழிப்புணர்வுகளை சமூக ஊடங்களில் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் கூட நடிகர் விமல் தன் சொந்த ஊருக்காக, கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தன்னார்வலராக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் சசிகுமாரும், கொரொனா விழிபுணர்வு களத்தில் தன்னார்வலராக களமிறங்கியுள்ளார்.
“நமக்கு வீட்ல இருக்க கஷ்டமாதான் இருக்கும், ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதனால் நாம் தான் ஒத்துழைக்கணும் ” என மதுரையில் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையுடன் சேர்ந்து கொரொனா விழிபுணர்வை மக்களிடம் பேசி இருக்கிறார் சசிகுமார்.