தமிழகத்தில் புதிதாக கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமாராக 50க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு. சென்னையில் அதிகபட்சமாக 55 பேருக்கு பாதிப்பு. மொத்த பாதிப்பு 1596 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியானதை தொடர்ந்து, கொரொனாவால் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்களை தமிழக அரசு கோவிட்-19 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவித்துள்ளது.