நாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்களை தயார் செய்து சுமார் 40 லட்சம் வரை மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர்.நாகர்கோவிலில், இருசக்கர வாகனங்களுக்கு ஆர்.சி புத்தகம் தயார் செய்து, குறைந்த வட்டியில் பணம் பெற்று அதை அதிக வட்டிக்கு கொடுத்து வருவதாக தகவல் வெளியானது.
அதை தொடர்ந்து, மோசடியில் ஈடுப்பட்ட கும்பலை போலிஸார் தேடி வந்தனர். அதனை தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவரின் நிதி நிறுவனத்திற்கு வந்த பல ஆர்.சி புத்தகங்களை பார்த்த போது ஒரே ஆர்.சி புத்தகத்தை வைத்து, 40க்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை தயார் செய்தது தெரிய வந்தது.இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், போலீஸார் 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.