தமிழகத்தில் 100 டிகிரியாக உயரும் வெப்பநிலை!

322

தமிழகத்தில் 10 உள் மாவாட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் உயர்ந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி, சேலம், திருத்தணியில் 103 டிகிரி, வேலூர், தருமபுரியில் 102 டிகிரி, திருச்சி,மதுரையில் 101 டிகிரி, கோவை, பாலையங்கோட்டையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் சில நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்.

வேலூர்,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  சென்னையில் கொரொனா தொற்று அதிகரிப்பால், சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!