சென்னை அம்பத்தூர் வ.உ.சி நகரில் வசித்து வந்தவர் புவனேஸ்வரி. கணவரின் குடிப்பழக்கம் பிடிக்காமல் அவரிடமிருந்து விலகி கார்த்திகேயன் என்பவரும் அவர் வாழ்ந்து வந்தார். புவனேஸ்வரிக்கு 3 வயதில் கிஷோர் என்ற மகன் இருக்கிறான்.
இந்நிலையில், கார்த்திகேயனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகன் கிஷோர் இடைஞ்சலாக இருப்பதாக கருதிய புவனேஸ்வரி அவனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி புவனேஸ்வரியும், கார்த்திகேயனும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்ட கிஷோர் அழுதுள்ளான். இதனால், ஆத்திரமடைந்த புவனேஸ்வரி தோசை கரண்டியால் கிஷோரை அடித்துள்ளார். இதில், கிஷோரின் தொடை எழும்பில் முறிவு ஏற்பட்டது. எனவே, சிறுவன் மயங்கி விழுந்தான். அதன்பின், கிஷோரை இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிறுவன் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறிய மருத்துவர், அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் சிறுவன் இறந்துவிட்டான்., இதையடுத்து போலீசாரிடம் சிக்கி விடுவோம் என பயந்த புவனேஸ்வரி சொந்த ஊருக்கு தூக்கி சென்று புதைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சொந்த ஊருக்கு சென்ற போது, சந்தேகம் அடைந்த புவனேஸ்வரியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் இந்த விவகாரம் அனைத்தும் தெரியவந்துள்ளது.