கிங்ஸ் லெவன் அட்டகாசம்! ராஜஸ்தான் படுமோசம்

IPL 2019 TAMIL: கிங்ஸ் லெவன் அட்டகாசம்! ராஜஸ்தான் படுமோசம்!!

4வது ஐ.பி.எல் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் மைதானத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல் 4 (4) நிலைக்கவில்லை. கிரிஸ் கெய்ல் மறுமுனையில் நிலைத்து ஆடினார். அகர்வால் 22 (24) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த கெய்ல், சர்ஃபராஸ் கான் சிக்ஸர்ஸ், பவுன்டரிகளாக விளாசினர்.

4 சிக்ஸர் மற்றும் 8 பவுன்டரி எடுத்த கெய்ல் , பின் 79 (47) ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் நிக்கோலஸ் பூரன், சர்ஃபராஸ் உடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.பூரன் 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 12(14) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கடைசி ஓவரில் சர்ஃபராஸ் அதிரடி காட்ட 6 பவுன்டரி, 1 சிக்ஸர் எடுத்த நிலையில் 46(29) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184/4 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் மற்றும் ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 8.1 ஓவர்களில், அந்த அணி 78 ரன்கள் எடுத்துருந்த போது, ரஹானே 27 (20) ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் போல்ட் ஆனார்.மறுமுனையில் நிலைத்து ஆடின பட்லர் 2 சிக்ஸ், 10 பவுன்டரி விளாசி 69 (43) ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார்.

சாம்சன் 30 (25), ஸ்மித் 20 (16), பென் ஸ்டோக்ஸ் 6 (2), திருப்பாதி 1 (4), கௌதம் 3 (4) என தடுமாற இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 170/9 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.