IPL போட்டியின் 39வது போட்டி, நேற்று இரவு, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய, பெங்களூர் அணியின், கோலி 9 ரன்கள் எடுத்து வெளியேறி ஏமாற்றினார். மறுமுனையில் ஆடிய பார்த்திவ் படேல் அதிரடியாக ஆடினார். டி.வில்லியர்ஸ் சிறிது நேரம் அடித்து ஆட, 25 ரன்கள் எடுத்து அவரும் வெளியேறினார். அக்ஷதீப் 25, ஸ்டாய்னிஸ் 14, மோயின் அலி 26 என ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில், பெங்களூர் அணி 161 ரன்கள் சேர்த்திருந்தது.
162 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள், சொர்ப்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். வாட்சன் 5, டுப்ளிசிஸ் 5, ரெய்னா 0, ராயுடு 29, ஜாதவ் 9 என சொர்ப்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். 28 ரன்களுக்கே 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி, அதிரடியாக ஆடினார். 7 சிக்ஸ், 5 பவுன்டரிகள் விளாசிய தோனி, 48 பந்துகளில் 84 ரன்கள் விளாசி, ரன்னை உயர்த்தினார். கடைசி வரை களத்தில் இருந்து அவுட்டாகாமல் இருந்தார் தோனி. கடைசி ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுன்டரிகள் விளாசினார் தோனி. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை, 160/7 என்ற நிலையில், அந்த பந்தில் அவுட்டாகி ஏமாற்றினார் ஷர்தூல் தாக்கூர். அதனால், சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதனால், பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதனால், பெங்களூர் அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இதனால், சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. பெங்களூர் அணி 8வது இடத்தில் உள்ளது.