IPL 2019 News: சென்னையா? பெங்களூரா? முதல் வெற்றி யாருக்கு?

349
ipl 2019 latest news in tamil

இன்று ஆரம்பமாகிறது 12 வது ஐபிஎல் லின் முதல் போட்டி. ‘தல தோனி’ யின் தலைமையிலான ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ‘விராட் கோலி’ யின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களம் காண்கின்றன.

அணியின் விவரங்கள் :சென்னை அணி :

மகேந்திர சிங் தோனி( கேப்டன்),

அம்பதி ராய்டு, ஷேன் வாட்ஸன், சுரேஷ் ரெய்னா, டுப்ளிசிஸ், முரளி விஜய், ட்வைன் ப்ராவோ, கேதர் ஜாதவ், சாம் பில்லிங்ஸ், ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், டேவிட் வில்லி, தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

பெங்களூர் அணி :

விராட் கோலி (கேப்டன்),

டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, நேதன் கவுல்டர் நைல், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது சிராஜ், ஹென்ரிச் கிளாசென், மொயின் அலி, காலின் டி கிராண்ட்ஹோம், பவன் நெகி, டிம் சவுதி, அக் ஷ்தீப் நாத், மிலிந்த் குமார், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், பிரயாஸ் ரே பர்மான், குல்வந்த் கேஜ் ரோலியா, நவ்தீப் ஷைனி, ஹிமாத் சிங்.

சென்னை அணி வயதான அணி என பலரும் விமர்சித்த நிலையில், 2 வருடம் இடைவெளிக்கு பிறகும் கூட அதிரடியான ஃபாம் உருவாக்கி வெற்றியை பதிவு செய்து அசத்தியது. தோனி (37), ஷேன் வாட்ஸன் (37), சுரேஷ் ரெய்னா (32), ப்ராவோ (35), ராயுடு (33), கேதர் (33), ஜடேஜா (30), டுப்ளிஸிஸ் (34),இம்ரான் தாஹிர் (39) என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  IPL 2019: கடைசி ஓவரில் மும்பை அணி த்ரில் வெற்றி!

பெரிய ஆட்டக்கார்களை கொண்டுள்ள பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பை வென்றது இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் , கோலி இந்த வருடம் கோப்பை வெல்ல முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சேப்பாக்கம் மைதானமே மஞ்சள் நிற ஜெர்ஸியில் ஜொலிக்க போகிறது. சென்னை ரசிகர்களுக்கு மஞ்சள் ஃபீவர் வந்துள்ளது என அனைவரும் பெறுமையாக கூறி வருகின்றர்.இன்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷத்திற்கும், அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.