2019 ஆம் ஆண்டு 2 வது ஐ.பி.எல் போட்டி இன்று மாலை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.கேன் வில்லியம்ஸன் காயத்தால் போட்டியில் தொடர முடியாததால், புவனேஷ்
குமார் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.கடந்த ஆண்டு, போட்டியில் பங்கு கொள்ளாத வார்னர், இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.
அதே போல், முதலில் களமிறங்கிய வார்னர் எதிர்பார்த்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களை
உற்சாகத்நில் ஆழ்த்தினார். 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரசல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதிக பட்சமாக விஜய் ஷங்கர் 40 (24), பார்ஸ்ட்டோ 39 (35) ரன்கள் எடுத்தனர். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் எடுத்திருந்தது.
182 என்ற இலக்குடன் களமிறங்கிய கோல்கட்டா அணி வீரர்கள், ஹைதராபாத் அணி பந்துவீச்சை பறக்கவிட்டனர். நித்திஷ் ராணா 68 (47) ரன்கள் குவிக்க, மறு முனையில் லின் நிலைக்கவில்லை, அடுத்து
களமிறங்கிய உத்தப்பா 35 (27), ரசல் 49 (19) என அதிரடி காட்ட இறுதியில் கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.