IPL போட்டியின், 24 வது போட்டி, நேற்று மாலை 4 மணிக்கு கொல்கட்டா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்றது. இதில், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கட்டா அணியின் சுனில் நரேன் 2 (7) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடின லின் 6 சிக்ஸர் 7 பவுன்டரிகள் விளாசினார். ராணா, உத்தப்பா, தினேஷ் கார்த்திக் என எவரும் நிலைக்கவில்லை. இம்ரான் தாஹிரின் அதிரடியன பந்துவீச்சால், அடுத்து அடுத்து விக்கெட்கள் விழுந்தன. லின் 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் தலா 1 சிக்ஸ், பவுன்டரி அடித்து, 10 ரன்கள் எடுத்திருந்த போது இம்ரான் தாஹிர் பந்தில் அவுட்டானார்.
இறுதியில், கொல்கட்டா அணி 20 ஓவர்கள் முடிவில் 161/8 ரன்கள் எடுத்திருந்தது. சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் 4 விக்கெட் வீழ்த்தினார். ஷர்துல் 2 விக்கெட்களும், சான்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
161 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், வழக்கம் போல் வாட்சன் நிலைக்கவில்லை. டுப்ளிசிஸ் 24 (16) எடுத்து போல்டானார். ரெய்னா மறுமுனையில் நிலைத்து ஆடி ஆறுதல் தந்தார். ஜாதவ் 20, தோனி 16 , ராயுடு 11 என எவரும் நிலைக்கவில்லை. நிலைத்து ஆடின ரெய்னா 7 பவுன்டரி 1 சிக்ஸருடன் 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா உடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா அதிரடி காட்ட ரன்கள் உயர்ந்தது. ஜடேஜா 5 பவுன்டரி விளாசி 17 பந்துகளில் 31 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதியில், சென்னை அணி 19.4 ஓவர்களில் 162/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.