IPL போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தின் ஒரு ஆட்டமான, CSK மற்றும் KXIP அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த சென்னையின் வாட்சன் வழக்கம் போல் ஏமாற்ற, டுப்ளிசிஸ் அதிரடியில் இறங்கினார். 10 பவுன்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசி 55 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். அவருடன் இணைந்த ரெய்னாவும் அவர் பங்கிற்கு ரன்களை சேர்த்தார்.38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 170/5 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின், லோகேஷ் ராகுல் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 36 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். பூரண் 22 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இறுதியில், பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 173 ரன்களை எளிதில் குவித்து வெற்றி பெற்றது. ஆனால், 14.4 ஓவர்களில் இலக்கை எட்டிருந்தால் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆனால், 14.4 ஓவரில் எட்ட முடியாததால் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.ஆனால், சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.