IPL 2019: 9வது ஐ.பி.எல் போட்டி – மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

261
Kings XI Punjab vs Mumbai Indians

9 வது ஐ.பி.எல் போட்டி பஞ்சாப் IS மைதானத்தில் நடைபெற்றது. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது.இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய மும்பை அணியின் ரோகித் 5 பவுன்டரி விளாசி 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து, முதல் விக்கெட்டில் 51/1 என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.டி.காக் அதிரடியாக ஆடினார். கடந்த போட்டியில் அசத்திய சூர்யகுமார் யாதவ் 11(6) நிலைக்கவில்லை. டி.காக் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து 120/3 என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

யுவராஜ் சிங் 18 (22) ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்திக் 19 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். பொல்லார்ட் 7 (9), குர்னல் 10 (5) ரன்கள் எடுத்து அவுட்டானார்.20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 176/7 ரன்கள் எடுத்திருந்தது.

177 இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ராகுல் அதிரடியில் இறங்கினார். கெய்லும் தன் பங்கிற்கு அடித்து ஆட 4 சிக்ஸ் மற்றும் 3 பவுன்டரிகளுடன் 24 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து, 53/1 என்ற நிலையில் அவுட்டானார்.மயங்க் அகர்வால் 21 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து 117/2 என அவரும் நிலைக்கவில்லை. ராகுல் 71 (57) ரன்கள், மில்லர் 15 (10) ரன்கள் அவுட்டாகமல் இருந்தனர்.இறுதியில் பஞ்சாப் அணி எளிதாக இலக்கை 18.4 ஓவர்களில் 177/2 அடித்து எட்டியது.

இதனால், பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி அடைந்தது.

பாருங்க:  IPL 2019: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு 12 லட்சம் அபராதம் - ஐ.பி.எல் நிறுவனம்!