12வது ஐ.பி.எல் போட்டி, நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.இதில், டாஸ் வென்ற ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினர். ராயுடு 1 (8), வாட்சன் 13 (13), ஜாதவ் 8 (3) ரன்களில் வெளியேறினர்.பின், ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் தோனி நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ரெய்னா 1 சிக்ஸ், 4 பவுன்டரிகளுடன் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து 88/4 என்ற நிலையில் அவுட்டானார்.
அதிரடியில் இறங்கிய தோனி, 4 சிக்ஸ் மற்றும் 4 பவுன்டரிகளை விளாசி 46 பந்துகளில் 75 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். ப்ராவோ 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 8 (3) ரன்களில் வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 175/5 ரன்கள் எடுத்திருந்தது.
176 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களும் சொற்ப்ப ரன்களில் வெளியேறினர். ரஹானே 0 (2), சஞ்சு சாம்சன் 8 (10), ஜாஸ் பட்லர் 6 (7) என ஏமாற்றினர். அப்போது 14/3 என அந்த அணி தடுமாறியது. அடுத்து வந்த திரிப்பாதி மற்றும் ஸ்மித் நிலைத்து ஆடினர்.
திரிப்பாதி 5 பவுன்டரி மற்றும் 1 சிக்ஸ் அடித்து 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்மித் 30 (28), பென் ஸ்டோக்ஸ் 46 (26), கௌதம் 9 (8), ஆர்ச்சர் 24 (11), கோபால் 0(3) என தடுமாறிய நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 167/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தனது, மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.