SRH vs RR Highlights

IPL 2019: ஹைதரபாத் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்!

நேற்று இரவு 8 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்ஸன் அதுரடியில் இறங்கினார். ரஹானேவும், சாம்ஸனும் சேர்ந்து ஹைதரபாத் பந்துவீச்சை தொம்சம் செய்தனர். ரஹானே 3 சிக்ஸ், 4 பவுன்டரிகளுடன் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். 4 சிக்ஸ், 10 பவுன்டரிகளுடன் 102 (55) ரன்கள் குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 16 (9) ரன்கள் எடுத்திருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 198/2 ரன்கள் குவித்திருந்தது.

199 என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியில் இறங்க, வார்னர் 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து, 110/1 என்ற நிலையில் ஆட்டமிழந்தார். உடனே பேர்ஸ்டோவும் 45(28) ரன்களில் வெளியேறினார்.வில்லியம்சன் 14(10), விஜய் ஷங்கர் 35(15), யூசஃப் பதான் 16(12), ரஷித் கான் 15(8) எடுத்தனர்.

இறுதியில் ஹைதராபாத் அணி 201/5 ரன்கள் குவித்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.