KKR vs DC Highlights

IPL 2019: ஷிகர் தவன் அதிரடியில் அபார வெற்றி பெற்றது டெல்லி!

IPL போட்டியில், 26வது போட்டி, நேற்று இரவு ஈடன் கார்டனஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கட்டா அணிக்கு டென்லி 0 (1), உத்தப்பா 28 (30), ராணா 11 (12) என தொடக்க வீரர்கள் ஏமாற்றினர். ஆனால், கில் நிலைத்து அதிரடியாக ஆடினார். 7 பவுன்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 39 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.

122/5 என்ற நிலையில், கொல்கட்டா அணி தடுமாறி கொண்டிருந்த நிலையில், அதிரடி மன்னன் ரசல் மீண்டும் அதிரடியில் இறங்கினார்.4 சிக்ஸ் மற்றும் 3 பவுன்டரிகள் அடித்து 21 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார் ரசல். இறுதியில், கொல்கட்டா அணி 20 ஓவர்கள் முடிவில் 178/7 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய டெல்லி அணியின் ஷிகர் தவன் அதிரடியில் இறங்க அந்த அணியின் ரன்கள் கடகடவென ஏறியது. ப்ரித்விஷா 2 சிக்ஸ் அடித்து 14 ரன்களில் வெளியேறினார். ஷ்ரேயஸ், இன்கிராம் நிலைக்கவில்லை. ரிஷப் தன் பங்கிற்கு 4 பவுன்டரி மற்றும் 2 சிக்ஸர் அடித்து 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதி வரை நிலைத்து ஆடின தவன் 63 பந்துகளில் 11 பவுன்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 97 ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் டெல்லி அணி 18.5 ஓவர்களில் 180/5 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனால், டெல்லி அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.