கொல்கட்டா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில், நேற்று இரவு நடந்த போட்டியில், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.இதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின், பார்த்திவ் (11) நிலைக்கவில்லை. பின் ஜோடி சேர்ந்த விராட் மற்றும் மோயின் அலி அதிரடியில் இறங்கினர். விராட் 9 பவுன்டரி, 4 சிக்ஸர் விளாசி IPL அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். மோயின் அலியும் தன் பங்கிற்கு, 6 சிக்ஸர், 5 பவுன்டரி விளாசி, 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.ஸ்டாய்னிஸ் 17 (8) ரன்கள் எடுத்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 213/4 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி.
214 என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கட்டா அணியின், தொடக்க வீரர் லின் (1) நிலைக்கவில்லை. சுனில் நரைன் 18, கில் 9, உத்தப்பா 9 என சொதப்ப, 11.5 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்திருந்தது. பின் களமிறங்கிய ராணா மற்றும் ரசல் அதிரடியில் இறங்க, ராணா 46 பந்துகளில் 85 ரன்கள் விளாசி, இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். ரசல் 9 சிக்ஸ் மற்றும் 2 பவுன்டரிகள் விளாச, 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து தேவையில்லாமல், ரன்அவுட் ஆனார். அதனால், கொல்கட்டா அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் எடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது, பெங்களூர் அணி. இதனால், பெங்களூர் அணி தனது 2 வது வெற்றியை பதிவு செய்தது.