IPL 2019 News in Tamil
IPL 2019 : வார்னர் அபாரத்தால் ஹைதராபாத் வெற்றி!
IPL போட்டியின் 47வது போட்டி , நேற்று இரவு நடைபெற்றது. இதில் கிங்ஸ் லென் பஞ்சாப் அணியும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த வார்னர், தாருமாறாக அடிக்க, ரன் ரேட் உயர்ந்து கொண்டே சென்றது. வார்னர் 7 பவுன்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசி 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். சாஹா தன் முதல் ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். மணிஷ் பாண்டே 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அனைவரும் சொர்ப்ப ரன்களில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 212/6 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின், ராகுல் சிறிது போராடி ரன் சேர்த்தார். வேறு எவரும் நிலைக்கவில்லை. ராகுல் 56 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். கெய்ல் 4, அகர்வால் 27, பூரன் 21, மில்லர் 11 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 168/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இதனால், ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், ஹைதராபாத் அணி , புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.இதனால், ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், ஹைதராபாத் அணி , புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
