CSK vs SRH Highlights 2019

IPL 2019 : வாட்சன் அதிரடியில் சென்னை அபாரம்! ஹைதராபாத் ஏமாற்றம்!!

IPL போட்டியின், 41வது போட்டி, நேற்று இரவு சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின், பேர்ஸ்டோ சொர்ப்ப ரன்னில் வெளியேறினார். வார்னர் அதிரடியில் இறங்க, 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில், மணிஷ் பாண்டே, விஜய் ஷங்கரும் அடித்து ஆட, ரன் உயர்ந்து கொண்டே சென்றது. மணிஷ் 49 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். விஜய் ஷங்கர் அவர் பங்கிற்கு 26 ரன்கள் எடுத்து தந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 175/3 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் வென்றது. இதுநாள் வரை பெரிதும் சோபிக்காத வாட்சன், நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடினார்.
முதலில் களமிறங்கிய டுப்ளிசிஸ் 1 ரன்னில், ரன் அவுட்டானார். ரெய்னா 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து, ரஷித் கான் பந்தில் அவுட்டானார். ராயுடு, சிறிது நிலைத்து 21 ரன்களும், ஜாதவ் 11 ரன்களும் எடுத்தனர்.

வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து, புவனேஷ்வர் பந்தில் அவுட்டானார்.இதனால், சென்னை அணி, 19.5 ஓவர்களில் 176/3 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதனால், சென்னை அணி மீண்டும், புள்ளி பட்டியலில் முதல் இடத்தை அடைந்தது.