நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.இதில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹானே 5 நிலைக்கவில்லை. பின் ஜாஸ் பட்லர் மற்றும் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடியது. பட்லர் 34 ரன்கள் எடுத்திருந்த போது, ஹேரி குர்னே பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.ஸ்மித் அதிரடியில் இறங்கி 59 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.
திரிப்பாதி, பென் ஸ்டோக்ஸ் நிலைக்கவில்லை. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 139/3 ரன்களில் சுருண்டது.அடுத்து களமிறங்கிய கொல்கட்டா அணி வீரர்கள் அதிரடியில் இறங்க, அந்த அணி 13.5 ஓவர்களிலே 140 ரன்கள் எடுத்து எளிதான வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக, லின் 50 (32), சுனில் நரைன் 47 (25), உத்தப்பா 26 (16) என ரன்கள் குவிக்க அந்த அணி 13.5 ஓவர்களில் 140/2 ரன்கள் எடுத்தது.இதனால், கொல்கட்டா தனது, 4வது வெற்றியை பதிவு செய்தது. ராஜஸ்தான் அணி 5வது தோல்வியை தழுவியது.