IPL 2019 News in Tamil
IPL 2019 : ராஜஸ்தான் அணி முன்னேற்றம்! ஹைதராபாத் ஏமாற்றம்!
IPL போட்டியின் 45வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய வார்னர் மற்றும் வில்லியம்சன் நிதானமாக ஆட, வில்லியம்சன் 13 ரன்களில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே மற்றும் வார்னர் அதிரடியில் இறங்கினர்.வார்னர் 37 ரன்களில் அவுட்டாக, மணிஷ் 9 பவுன்டரிகளுடன் 36 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
விஜய் ஷங்கர் 8, ரஷித் கான் 17 ரன்கள் எடுக்க, இறுதியில் , ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின், ரஹானே, லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன் சிறிது நம்பிக்கை ஊட்டும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரஹானே 4 பவுன்டரி, 1 சிக்ஸர் விளாசி 34 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் அதிரடியில் இறங்க, 4 பவுன்டரி, 3 சிக்ஸருடன் 26 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 4 பவுன்டரி, 1 சிக்ஸர் அடித்து 48 ரன்கள் சேர்த்தார்.
ஸ்மித் அவர் பங்கிற்கு 22 ரன்கள் சேர்க்க , ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 161/3 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், ராஜஸ்தான் அணி 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஹைதராபாத் அணி 4வது இடத்தில் உள்ளது.
