Mumbai Indians vs Kings XI Punjab

IPL 2019: மும்பை இந்தியன்ஸ் அதிரடியான வெற்றி! ஏமாற்றம் அடைந்தது பஞ்சாப்!

IPL 2019ல், 24வது போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. இப்போட்டியில், காயம் காரணமாக மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா விளையாடவில்லை. அதனால் பொல்லார்ட் கேப்டனாக செயல்ப்பட்டார்.

இதில் டாஸ் வென்ற, மும்பை கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் ராகுல் அதிரடியாக ஆடினார். கெய்ல் மற்றும் ராகுல் சேர்ந்து சிக்ஸர் மற்றும் பவுன்டரி மழையை பொழிந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு, 116 ரன்கள் எடுத்திருந்த போது, 7 சிக்ஸர் மற்றும் 3 பவுன்டரிகளுடன் 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்து கெய்ல் வெளியேறினார். அடுத்து வந்த மில்லர் (7), கரண் (5), குரன் (8) என எவரும் நிலைக்கவில்லை. ஆனால், இறுதிவரை அவுட்டாகாமல் நிலைத்து விளையாடிய ராகுல், சதம் அடித்து விளாசினார். 64 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார்.இறுதியில் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 197/4 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் முதலில் வந்த டி.காக் (24), லேட் (15), சூர்யகுமார் (21) என எவரும் நிலைக்கவில்லை.அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 10 சிக்ஸர் மற்றும் 3 பவுன்டரி விளாசின பொல்லார்ட், 31 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார்.

அடுத்து வந்த இஷான் (7), ஹர்திக் (19), ஜோசஃப் (15) என ரன்கள் எடுக்க, இறுதியில் மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 198/7 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.இதனால், மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.