நேற்று இரவு ஹைதராபாத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.இதில் டாஸ் வென்ற புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில்,
களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேற, மும்பை அணி ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது.
ரோகித் 11, டி.காக் 19, சூர்யகுமார் 7, இஷான் கிஷன் 17, குர்னல் பாண்டியா 6, ஹர்திக் 14 என ரன்கள் எடுத்தனர்.
சிறிது நேரம் நிலைத்து அடித்து ஆடின பொல்லார்ட் 4 சிக்ஸ் மற்றும் 2 பவுன்டரிகளை விளாசி 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.இறுதியில், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 136/7 ரன்கள் எடுத்திருந்தது.
எளிய இலக்கை எட்டிய ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார் பந்துவீச்சாளர் ஜோசஃப். முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி ஹைதராபாத் அணியை தடுமாறவிட்டார். வார்னர், விஜய் ஷங்கர், தீபக் ஹூடா, ரஷித் கான் உள்ளிட்ட 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால், விக்கெட்களை இழந்த ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.இதனால், மும்பை அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.