IPL லீக் போட்டியின் 44வது போட்டி, நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
நேற்றைய போட்டியில், சென்னை அணியில், பெரிய மாற்றம் ஏற்பட்டு இருந்தது.
M.S. தோனி, டுப்ளிசிஸ், ஜடேஜா என மூவரும் நேற்றைய போட்டியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக, முரளி விஜய், துருவ் ஷோரே, சான்ட்னர் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இதனால், சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த மும்பை அணியின், ரோகித் நிதானமாக நிலைத்து ஆடினார். டி.காக் வந்த உடன் பெவிலியன் திரும்பினார். லீவிஸ் சிறிது நேர் நிலைத்து, 32 ரன்கள் எடுத்தார்.
ஹர்திக் 23 ரன்கள் எடுத்தார். ரோகித் 67 ரன்கள் எடுத்து இறுதியில் அவுட்டானார். இதனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/4 ரன்கள் எடுத்தனர்.
அதன்பிறகு களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் அடுத்து அடுத்து, சொர்ப்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். வாட்சன் 8, ரெய்னா 2, ராயுடு 0, ஜாதவ் 6, ஷோரே 5 என அடுத்தடுத்து விக்கட்களை பறிகொடுத்து தடுமாறினர். அதிகபட்சமாக முரளி விஜய் 38, ப்ராவோ 20 ரன்கள் எடுத்தனர்.
இதனால், சென்னை அணி 17.4 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து, 109 ரன்கள் மட்டும் எடுத்து படுதோல்வி அடைந்தனர்.
மும்பை அணியை சந்திக்கும் போது மட்டும், தொடர்ந்து தோல்விகளை சென்னை அணி சந்தித்து வருகிறது. இது விதியா ? இல்லை என்னவென்று தெரியவில்லை !
மும்பை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.