நேற்று இரவு வான்கடே மைதானத்தில் நடந்த IPL போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த RCB அணியின், கோலி 8, பார்த்திவ் படேல் 28 நிலைக்கவில்லை. அடுத்து ஜோடி சேர்ந்த டி.வில்லியர்ஸ் மற்றும் மொயின் அலி அதிரடியில் இறங்கினர்.
டி. வில்லியர்ஸ் 6 பவுன்டரி, 4 சிக்ஸர் விளாசி 51 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 171/7 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய மும்பை அணியின், டி.காக் 40 (26), ரோகித் 28 (19), இஷான் கிஷன் 21 (9), ஹர்திக் 37 (16) என குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால், மும்பை அணி 19 ஓவரில் 172 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.இதனால், மும்பை அணி புள்ளி பட்டியலில், 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.