rcb vs rr 2019

IPL 2019: மீண்டும் தோல்வி விரக்தியில் RCB! முதல் வெற்றி கனியை பறித்தது ராஜஸ்தான்!

ஜெய்பூர் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது.நடந்த 3 போட்டிகளில், இரு அணியுமே வெற்றி பெறாத நிலையில், நேற்று நடந்த போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.

தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில், விராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் களமிறங்கினர். பார்த்திவ் படேல் அதிரடியாக விளையாடினார்.

கோலி 23 (25) நிலைக்கவில்லை, டி. வில்லியர்ஸ் 13 (9), ஹெட்மயர் 1 (9), ஸ்டாய்னிஸ் 31 (28), பார்த்திவ் படேல் 67 (41) எடுக்க, பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 158/4 ரன்கள் எடுத்திருந்தது.

159 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் 59 (43) மற்றும் திரிப்பாதி 34 (23) அதிரடி காட்ட, அந்த அணி 19.5 ஓவரில் 164/3 என வெற்றி பெற்றது.இதனால், ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.