IPL 2019ன் கடைசி லீக் ஆட்டம் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடரஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த கொல்கட்டா அணி, மும்பை அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல், அடுத்து அடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.
முதலில் களமிறங்கிய லின் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த எவரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. உத்தப்பா கஷ்டப்பட்டு 47 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராணா 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ரசல் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.இறுதியில் கொல்கட்டா அணி 20 ஓவர்கள் முடிவில் 133/7 ரன்கள் எடுத்தது.
எளிய இலக்கை எட்டிய மும்பை அணி, 16.1 ஓவர்களில் எளிதாக எட்டியது. ஒரு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. டி.காக் 30 ரன்கள் எடுத்து வெளியேற, ரோகித் மற்றும் சூர்யகுமார் அடித்து ஆடி இலக்கை எளிதாக எட்டினர். ரோகித் 55, சூர்யகுமார் 27 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க, இறுதியில் மும்பை அணி 16.1 ஓவர்களில் 134/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால், ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது கொல்கட்டா அணி. இதனால், 4வது இடத்தை ஹைதராபாத் அணி பிடித்துள்ளது. மும்பை அணி 16.1 ஓவர்களில் வெற்றி பெற்றதால், ரன்ரேட் உயர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.
நாளை முதல் ப்ளே ஆஃ ப் சுற்றுகள் ஆர்பமாகிறது. அந்த போட்டியில், முதல் இடத்தில் உள்ள மும்பையும், இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணியும் மோதவுள்ளன. இரண்டாவது ப்ளே ஆஃப் சுற்று, டெல்லி மற்றும் ஹைதராபாத் இடையே நடக்கவுள்ளது.