RCB vs KXIP Highlights

IPL 2019 : பெங்களூர் தொடர் வெற்றி! உற்சாகத்தில் RCB ரசிகர்கள்!!

IPL போட்டியின், 42வது போட்டி, நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த, பெங்களூர் அணியின், பார்த்திவ் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். கோலி 13 ரன்களில் வெளியேறினார். மோயின் அலி,(4) நிலைக்கவில்லை. மறுமுனையில் இருந்த டி.வில்லியர்ஸ் அதிரடியில் இறங்க, ரன் உயர்ந்தது. 7 சிக்அர் மற்றும் 3 பவுன்டரிகள் விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டாய்னிஸ், சிறிது நம்பிக்கை சேர்க்க, கடைசி இரண்டு ஓவர்களில் ரன் உயர்ந்து கொண்டே சென்றது. ஸ்டாய்னிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். ஏ.பி.டி 44 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 202/ 4 ரன்கள் குவித்தது..

அடுத்து பேட்டிங் செய்த,பஞ்சாப் அணியின் ராகுல் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கெய்ல் 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து, உமேஷ் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
மயங்க் அகர்வால் 35 (21), மில்லர் 25 (24), பூரன் 46 (28) என ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 185/7 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தனர்.

இதனால், பெங்களூர் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது. இதனால் பெங்களூர் அணி 7வது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் அணி 5வது இடத்தில் உள்ளது.