IPL 2019 DC vs RCB

IPL 2019 : புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது டெல்லி அணி!

IPL போட்டியின் 46வது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஷ்ரேயஸ் ஐயர், பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய டெல்லி அணியின், ஷிகர் தவன் அதிரடியாக ஆடி, அரை சதம் அடித்தார். ஷ்ரேயஸ் 37 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். ப்ரித்விஷா 18, இன்கிராம் 11, ரூதர்ஃபோர்ட் 28, ரிஷப் 7 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 187/6 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியின், பார்த்திவ் படேல் மற்றும் கோலி சிறிது நேரம் நிலைத்து, முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். பார்த்திவ் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து கோலி 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.டி.வில்லியர்ஸ 17, டூபே 24, ஸ்டாய்னிஸ் 32 ரன்கள் எடுக்க, பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 171/7 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
டெல்லி அணி சார்பில், ரபாடா, மிஷ்ரா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதனால், டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனால், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணியை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது டெல்லி அணி.