நேற்று இரவு 8 மணிக்கு, டெல்லி ஃபெரொஷா கோட்லா மைதானத்தில் நடந்த 33வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின், ராகுல் தலா 1 சிக்ஸ் மற்றும் பவுன்டரி அடித்து 12 ரன்களில் வெளியேறினார். அதிரடி மன்னன் கெய்ல், 5 சிக்ஸர், 6 பவுன்டரிகள் விளாசி 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்து சந்திப் லமிசானேவிடம் சரணடைந்தார்.
பின் வந்த மயங்க் அகர்வால், மில்லர், குரன் என எவரும் நிலைக்கவில்லை. மந்தீப் சிங் சுமாராக ரன் சேர்த்தார், 27 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார், பின் அஷ்வின், பிரார் சிறிது ரன்களை சேர்க்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில், 163/7 ரன்கள் எடுத்திருந்தது.
165 என்ற அலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின், ப்ரித்விஷா நல்ல தொடக்கம் தந்த நிலையில், தேவையில்லாமல், ரன்அவுட்டானார். பின், தவன் மற்றும் ஷ்ரேயஸ் அதிரடியில் இறங்கினர். 2வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்திருந்த போது, தவன் 41 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்திருந்த போது, கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஷ்ரேயஸ் ஐயர், 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷப், இன்கிராம் சிறிது ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 166/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால், டெல்லி அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், டெல்லி அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்தை தக்க வைத்துள்ளது.