CSK vs DC Highlights 2019

IPL 2019: தோனி மற்றும் தாஹிரின் அதிரடியில் வென்றது CSK!

50வது IPL லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த சென்னை அணியின் வாட்சன் வழக்கம் போல் ஏமாற்ற, டுப்ளிசிஸ், ரெய்னா இணைந்தனர். ரெய்னா பவுன்டரிகளாக விளாச ரன்கள் உயர்ந்தது. பின் டுப்ளிசிஸ் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின், தல மற்றும் சின்ன தல ஜோடி சேர்ந்தனர். ரெய்னா, 8 பவுன்டரி, 1 சிக்ஸர் விளாசி 37 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின், தல தோனி அதிரடி காட்டி ரன்களை சேர்த்தார்.

102-3 என்ற நிலையில் ஆட ஆரம்பித்த தோனி அடுத்த 5 ஓவர்களில் 76 ரன்கள் சேர்க்க வைத்தார். தோனி 22 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுன்டரி விளாசி 44 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜடேஜாவும் அடித்து ஆட 10 பந்துகளில் 25 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 179/4 ரன்கள் குவித்தது.

180 என்ற இலக்கை எட்டிய டெல்லி அணிக்கு, இம்ரான் தாஹிர் பெரும் இடையூரு அளித்தார். ப்ரித்விஷா 4, தவன் 19, ரிஷப் 5, இன்கிராம் 1, அக்ஷர் படேல் 9 என ஏமாற்ற, ஷ்ரேயஸ் மட்டும் சிறிது நிலைத்து ஆடி, 44 ரன்கள் எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் அடுத்து அடுத்து விக்கெட்களை எடுத்ததால், டெல்லி அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வி அடைந்தது.

இதனால், சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்று உள்ளது. டெல்லி அணி 2வது இடத்தில் உள்ளது.