IPL போட்டியின் 33வது போட்டி, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. நேற்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்ப்பட்டார்.
டாஸ் வென்ற ரெய்னா, பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்கம் அதிரடியாக இருந்தது. வாட்சன் மற்றும் டுப்ளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. 79 ரன்கள் எடுத்திருந்த போது, முதல் விக்கட்டை இழந்தது. வாட்சன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா, ராயுடு, ஜாதவ் என ெவரும் நிலைக்கவில்லை. தடுமாறிய ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ரஷித் கான் பந்துவீச்சில் அசத்தினார்.
மோசமாக விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 132/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி, 16.5 ஓவர்களிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. வார்னர் மற்றும் பேர்ச்டோ அதிரடி காட்ட, அந்த அணி எளிதில் வெற்றி பெற்றது. வார்னர் 10 பவுன்டரிகளுடன், 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பேர்ச்டோ, 3 சிக்ஸ், 3 பவுன்டரிகளுடன் 44 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இறுதியில் ஹைதராபாத் அணி, 16.5 ஓவரில் 137/4 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இதனால், சென்னை அணி 7 வெற்றி 2 தோல்விகளுடன், புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. ஹைதராபாத் அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதனால், தோனி இருந்திருந்தால், இந்த தோல்வி அடைந்திருக்குமா CSK என பலரும் விமர்சித்து வருகின்றனர்.