IPL 2019ல் 25வது போட்டியானது, நேற்று ஜெய்பூர் மைதானத்நில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள், பெரிய அளவில் எவரும் ரன்கள் எடுக்கவில்லை. ஆனால், ஆரம்பத்திலே அடித்து விளையாட ஆசைப்பட்ட அவர்கள், அடுத்து அடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ரஹானே 3 பவுன்டரிகளுடன் 14 (11), ஜாஸ் பட்லர் 4 பவுன்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 23 (10) ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த அனைவரும், பந்துகளை வீனடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 15 (22), சாம்ஸன் 6 (6), திரிப்பாதி 10 (12), பென் ஸ்டோக்ஸ் 28 (26) ரன்கள் எடுத்திருந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 151/7 ரன்கள் எடுத்திருந்தது.
152 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் வாட்ஸன் 0 (4), டுப்ளிசிஸ் 7 (10), ரெய்னா 4 (4) என தொடக்க வீரர்கள் ஏமாற்றினர். பின் களமிறங்கிய ராயுடு மற்றும் தோனி ஜோடி நிலைத்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
தோனி 3 சிக்ஸர் மற்றும் 2 பவுன்டரிகளுடன், 43 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். ராயுடு, இதுவரை நடந்த போட்டிகளில் நிலைத்து ஆடவில்லை, சொர்ப்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளானார். தற்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதம், அரைசதம் அடித்து அசத்தினார். ராயுடு, 3 சிக்ஸர் மற்றும் 2 பவுன்டரிகள் விளாசி, 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தார்.
இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 155/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், சென்னை அணி தனது 6வது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.