KXIP vs SRH Highlights

IPL 2019: தடுமாறியது ஹைதராபாத்! வெற்றி பெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!!

நேற்று இரவு மொஹாலியில் நடந்த 22வது IPL போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த வார்னர் வழக்கம் போல் அதிரடியில் இறங்க, மறுமுனையில் பேர்ஸ்டோ 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். விஜய் ஷங்கர் 26, நபி 12, மனிஷ் பாண்டே 19, தீபக் ஹூடா 19 என சொதப்பினர். மறுமுனையில் நிலைத்து ஆடின வார்னர் 62 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 150/4 ரன்கள் எடுத்திருந்தது.151 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கே.எல் ராகுல் அதிரடியில் இறங்கினார். கெய்ல்(16) நிலைக்கவில்லை. மறுமுனையில் களமிறங்கிய அகர்வால் சிறிது நேரம் நிலைத்து, அடித்து ஆடினார். பின் 55 (43 ) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அதற்கு பின் வந்த, மில்லர், மந்தீப் சிங் நிலைக்கவில்லை. ராகுல் இறுதிவரை களத்தில் இருந்து 53 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில், 151/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதனால், பஞ்சாப் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.