டெல்லி, ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த 33வது ஐ.பி.எல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ்
மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை அணியின் ரோகித் 30 (22), டி.காக் 35 (27), சூர்யகுமார் 26 (27) என எடுத்தனர். 15 ஓவர்களில் 104/4 என்ற நிலையில் இருந்த போது, ஹர்திக் பாண்டியா ரன் ரேட்டை உயர்த்தினார். 15 பந்துகளில் 3 சிக்ஸ் மற்றும் 2 பவுன்டரிகள் விளாசி 32 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 168/5 ரன்களை எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணி தடுமாற்றமான ஆட்டத்தை ஆடியது. முதலில் ஆறுதலாக விளையாடிய ஷிகர் தவன், 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது ஹர்திக் பந்தில் அவுட்டானார்.
ப்ரித்விஷா 20, முன்றோ 3, ஷ்ரேயஸ் 3, ரிஷப் பண்ட் 7, அக்ஷர் படேல் 26 ரன்கள் எடுத்து அனைவரும் ஏமாற்ற, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 128/9 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தனர்.
இதனால், மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இதனால், மும்பை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.