delhi vs mumbai ipl 2019

IPL 2019: டெல்லி அபாரம்! மும்பை பரிதாபம்!

நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், மும்பை மற்றும் டெல்லி

பலபரீட்சை மேற்கொண்டது.இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த டெல்லி அணியின் ஷிகர் தவன் மற்றும் பிரித்வி ஷா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரித்வி ஷா 7 (6) நிலைக்கவில்லை, தவன் 43 (36) , ஷ்ரேயஸ் ஐயர் 16 (10) , இன்கிராம் 47 (32) எடுக்க, அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மும்பை அணியின் பந்து வீச்சை நான்கு புறமும் சிதறடித்தார், 7 சிக்ஸர் மற்றும் 7 பவுன்டரிகளை அடித்த ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது.

பின் 214 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர் டி காக் 4 பவுன்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து அதிரடியில் இறங்கினார், ஆனால் 27 (16) ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் ஷர்மா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் ரோகித் 14 (13), சூர்யகுமார் யாதவ் 2 (6) நிலைக்கவில்லை. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் தனது பங்கிற்கு 53 (35) ரன்கள் விளாசினார்.பொல்லார்ட் 21 (13), குர்னல் பாண்டியா 32 (15) ரன்கள் எடுக்க அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 0 (2), மெக்கலெங்கன் 10 (8), கட்டிங் 3 (4) , சலாம் 5 (4) என நிலைக்கவில்லை.

இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 19.2 ஓவரில் 176 ரன்கள் எடுத்து மும்பை அணி தோல்வி அடைந்தது.இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.