IPL 2019ன் தகுதி சுற்று 2 (Qualifier 2) ல், நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியின், சாஹா 8 ரன்னில் வெளியேற, கப்தில் பெரிதும் நம்பிக்கை கொடுத்து அதிரடியாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டேவும் சிறிது நிலைத்து ஆடினார்.
கப்தில் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அமித் மிஷ்ரா பந்தில் வெளியேற, மணிஷ் 36 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கீமோ பந்தில் வெளியேறினார்.
வில்லியம்சன் 27 பந்நுகளில் 28 ரன்கள் எடுக்க, விஜய் ஷங்கர் 11 பந்துகளில் 25 ரன்கள் விளாச, நபி 20 ரன்கள் எடுக்க, இறுதியில் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 162/8 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின், ப்ரித்வி ஷா அதிரடியில் இறங்கினார். ஷிகர் தவன் 17 ரன்களில் வெளியேற, ஷ்ரேயஸ் ஐயரும் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். 38 பந்துகளில் 6 பவுன்டரி, 2 சிக்ஸர் விளாசி, ப்ரித்வி ஷா 56 ரன்கள் குவித்தார்.
ரிஷப் பன்ட், 21 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 2 பவுன்டரிகள் விளாசி, 49 ரன்கள் குவித்தார். 158 ரன்கள் எடுத்திருந்த போது, ரிஷப் வெளியேற, கீமோ பால் கடைசி ஓவரில் மீதி ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில், டெல்லி அணி, 19.5 ஓவர்களில் 165/8 ரன்கள் குவித்து மாபெரும் வெற்றி பெற்றது.
இதனால், டெல்லி அணி நாளை நடக்கவிருக்கும் எலிமினேட்டர் 2 (Eliminator 2)ல் சென்னை அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி, ஃபைனல்ஸில் மும்பை அணியுடன் மோதும்.