சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம்

IPL 2019: சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது!

சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23ம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடந்த

அப்போட்டிக்கான டிக்கெட்கள் 1 மணி நேரத்தில் விற்பனையானது.

அந்த ஆட்டத்தில், ஆடுகளம் பற்றி பல பிரச்சனைகள் எழுந்தது. அதனால், பேட்ஸ்மேன்களால் நிறைய ரன்கள் சேர்க்க முடியவில்லை. வெறும் 70 ரன்களே இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். சிக்ஸர்ஸ்களையும், பவுன்டரிகளையும் பார்க்கவே முடியவில்லை. இதனால், அனைவரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.

அதையடுத்து, வரும் ஞாயிற்று கிழமை மார்ச் 31ம் தேதி சென்னையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட்கள் இன்று விற்பனை செய்யப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் இருந்து வந்த ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்தனர்.

டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால், போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.