முதல் ஐ.பி.எல் போட்டி, மார்ச23 ம் தேதி சென்னைக்கும் பெங்களூருவிற்கும் இடையே நடந்தது. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 70 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இரண்டாவது களமிறங்கிய சென்னை அணியும் 17.4 ஓவர்களில் தான் 70 ரன்களை எட்டி வெற்றி பெற முடிந்தது.
இது குறித்து வருத்தம் தெரிவித்த தோனி :
இப்படி ஒரு ஆடுகளத்தை இதுவரை கண்டதே இல்லை, பந்து இப்படி ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். RCB 70 ரன்களை எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய சென்னை அணி 5 ஓவரில் எடுக்க கூடிய 70 ரன்களை 17.4 ஓவர்களில் எடுத்தது அதிருப்தியாக இருந்தது. பயிற்சியின் போது பந்து இந்தளவுக்கு சுழலவில்லை.
இந்த ஆடுகளம் கடந்த 2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஆடுகளத்தை நினைவூட்டியது. அதிகபட்சம் 130, 150 ரன்களை எதிர்பார்தோம். ஹர்பஜன் மற்றும் ஜடேஜா பந்துகள் அதிக அளவில் சுழலாது, ஆனால் இந்த ஆடுகளத்தில் தான் இப்படி அமைந்துள்ளது. இப்படிப்பட்ட ஆடுகளத்தில் பேட்டிங் செய்வதே கடினம் என்று காட்டமாக பேசினார் தோனி.
ஆடுகளம் குறித்து விராட் கோலி கூறுகையில் :
ஆடுகளம் இப்படி செயல்படும் என்று கருதவேயில்லை. 150 ரன் வரை சேர்த்திருக்க ஆசைப்பட்டோம். ஆனால், முக்கியமான போட்டியில் இப்படி ஒரு தோல்வியை சந்திக்காமல் முதல் போட்டியில் சந்தித்தது நல்லது தான். இந்த ஆடுகளத்தில் வேறு என்ன பெற முடியும், எந்த பேட்ஸ்மேனுமே இந்த ஆடுகளத்தில் தடுமாற தான் செய்வார்கள்.
100 முதல் 110 ரன்கள் எடுத்திருந்தால் கூட ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு போயிருக்க முடியும் என கூறினார்.