chennai vs mumbai

IPL 2019: சென்னை சுருண்டது; மும்பை வென்றது!

மும்பை வான்கடே மைதானத்தில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த மும்பை அணியின், டி.காக் 4, ரோகித் ஷர்மா 13, யுவராஜ் சிங் 4 நிலைக்கவில்லை. அணி 3 விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 59 (43) மற்றும் ஹர்திக் பாண்டியா 25 (8) வின் அதிரடியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 170/5 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினர். ராயுடு 0, வாட்ஸன் 5, ரெய்னா 16 என நிலைக்கவில்லை.கேதர் ஜாதவ் மட்டும் போராடி 58 (54) ரன்கள் எடுத்தார். தோனி 12, ஜடேஜா 1, ப்ராவோ 8, தீபக் சஹர் 7, ஷர்துல் தக்கூர் 12 என வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 133/8 எடுத்து படுதோல்வி அடைந்தது சென்னை அணி.

இதனால், மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில், தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், சென்னை அணி 4 போட்டிகளில் 3-1 என்ற நிலையில் Points Table ல் 2வது இடத்தில் உள்ளது.