IPL 2019 News in Tamil
IPL 2019 : சூப்பர் ஓவரில் மும்பை த்ரில் வெற்றி! ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்!!
IPL லீக் ஆட்டத்தின் 51வது போட்டி, நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய டி.காக் அதிரடியாக ஆடினார். 58 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். ரோகித் 24, சூர்யகுமார் 23 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் 7, குர்னல் பாண்டியா 9 ரன்கள் எடுக்க, இறுதியில் மும்பை அணி 162/5 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் அணியில் வார்னர் இல்லாததால் சற்று தடுமாறியது. மணிஷ் பாண்டே அதிரடியாக ஆட, ரன் உயர்ந்தது. மணிஷ் 47 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். சாஹா 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். நபி 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து உதவினார்.இறுதியில், ஹைதராபாத் அணியும் 162/6 ரன்கள் எடுத்தது.
இரு அணியும் 162 ரன்கள் எடுத்ததால், சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 8 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த மும்பை அணி 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம், மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
