csk vs kkr 2019 highlights

IPL 2019: சீறிய CSK பவுலர்கள்; சரிந்தது கொல்கட்டா அணி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த கொல்கட்டா அணி வீரர்கள், சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினர். லின் 0, நரேன் 6, உத்தப்பா 11 என தடுமாறினர். 9 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.பின், 24/4, 44/5, 47/6 என விக்கெட்களை பறிகொடுத்து தத்தளித்தது கொல்கட்டா அணி.

அனைவரின் நம்பிக்கையாக திகழ்ந்த ரசல் மட்டும் களத்தில் நிலைத்து விளையாடினார். ரன் ஓடும் போது, ரசலுக்கு காலில் அடிப்பட்டது, அதையும் பொருட்பாராமல், பொறுப்புடன் ஆடினார் ரசல். 3 சிக்ஸ், 5 பவுன்டரிகளுடன், 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், கொல்கட்டா அணி, 20 ஓவர்கள் முடிவில் 108/9 ரன்கள் மட்டுமே குவித்தது.

எளிய இலக்கை விரட்டிய சென்னை அணியின், வாட்சன் அவசரப்பட, 1 சிக்ஸ் மற்றும் 2 பவுன்டரிகள் விளாசி 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அனைவரும், மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பொறுமையாக விளையாடி, ரன் எடுத்து கொள்ளலாம் என்ற மனக்கசக்கில் விளையாடியது போல் தெரிந்தது. டுப்ளிசிஸ் 43 (45), ரெய்னா 14 (13), ராயுடு 21 (31), ஜாதவ் 8 (8) ரன்கள் எடுத்தனர். இறுதியில் சென்னை அணி, 17.2 ஓவர்களில் 111/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதனால், சென்னை அணி 5 வெற்றிகளுடன், முதல் இடத்தில் உள்ளது.