12வது ஜ.பி.எல் போட்டிகள்

IPL 2019 – சிஎஸ்கே பயிற்சி போட்டி; கூட்டம் நிரம்பிய சேப்பாக்கம் மைதானம்

12வது ஜ.பி.எல் போட்டிகள் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது.கடந்த ஆண்டு கோப்பையை வென்ற சி.எஸ்.கே அணி இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் என பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதற்கிடையே, 12வது ஐ.பி.எல் போட்டியில் கலந்து கொள்ள சென்னை அணி வீரர்கள் தோனி, ரெய்னா, ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்கள் 3 நாட்களுக்கு முன் சென்னை வந்து அடைந்தனர்.2 நாட்களாக சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அது போல் நேற்று நடந்த பயிற்சி போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடினர். மைதானமே நிரம்பியது.

உண்மையான போட்டி நடப்பது போல் தோற்றம் அளித்தது. சென்னை அணி வீரர்கள் பயிற்சியின் போது இரு அணியாக பிரிந்து விளையாடினர்.அப்போது, ரசிகர்கள் ஒவ்வொரு வீரர்களும் களம் இறங்கும் போது கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தி ஆட்டத்தை ரசித்தனர்.

இதற்கிடையே, வரும் 23 ம்(மார்ச் 23) தேதி முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட்கள் சற்று நிமிடத்தில் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.